Ramoji-Publications-Ramoji-Academy-of-movies

நூல் வெளியீட்டுப் பிரிவு

ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸின்(RAM) நூல் வெளியீட்டுப் பிரிவு(Publications Division) திறமையான எழுத்தாளர்களுக்கு அவர்களின் படைப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தவும், அங்கீகரிக்கப்பட்ட புத்தக ஆசிரியர் என்ற பெருமையோடு முன்னேறவும் ஒரு தளத்தை வழங்குகிறது.

நீங்கள் ஒரு புனைகதை எழுத்தாளரா?

இப்பிரிவு அதன் தரத்தை பூர்த்தி செய்யும் புனைகதை படைப்புகளுக்கு விரிவான வெளியீடு மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவை வழங்குகிறது.

இது ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்கிறது மற்றும் ஆன்லைனில் புத்தகங்களை விளம்பரப்படுத்தவும் கணிசமான வாசகர்களை ஈர்க்கவும் பல்வேறு சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்துகிறது.

வெளிப்படைத்தன்மை

ராயல்டி தொடர்பான எழுத்தாளர்களின் கவலைகளைத் தணிக்கும் வகையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. அச்சிடுதல் மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளைச் சரிசெய்த பிறகு, எழுத்தாளருக்கு உரிய வருவாயைப் அவர் பெறுவதை இப்பிரிவு உறுதிசெய்கிறது.

7 இந்திய மொழிகளில் வெளியிடப்படும்:

பப்ளிகேஷன்ஸ் பிரிவு நமது மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையின் பாரம்பரியத்தில் வலுவான நம்பிக்கையைக் காட்டுகிறது, சொல்லப்பட வேண்டிய கதைகளின் மறைக்கப்பட்ட ரத்தினங்களை ஆர்வத்துடன் தேடுகிறது. இனம் மற்றும் பிராந்திய உணர்வைக் கொண்டாடும், பல்வேறு மொழிகளில் அதாவது தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடா, வங்காளம், இந்தி ஆகிய மொழிகளில் சமகால சமூக வாழ்க்கையின் தலைப்புகளில் கற்பனையான படைப்புகளை வெளியிட ஊக்குவிக்கிறது.

பப்ளிகேஷன்ஸ் பிரிவின் பெரிய குறிக்கோள் என்பது துடிப்பான இலக்கிய கலாசாரத்தை வளர்ப்பதாகும்.
உங்கள் கதையை வடிவமைப்பதற்கான
சிறந்த நேரம் இப்போது…

உங்கள் விவரங்களைப் பகிரவும், விரைவில் உங்களுக்கு பதிலளிக்கிறோம்