இந்தியாவில் விரிவான திரைப்பட உருவாக்கப் படிப்புகளை (h1) முதன்முதலில் கொண்டு வந்தது ராமோஜி திரைக் கலைக்கூடம் தான் , ஆழமான மற்றும் சிறந்தமுறையில் ஒருங்கிணைக்கப்பட்ட திரைப்பட தயாரித்தல் குறித்த படிப்புகளை வழங்குகிறது.
இது திரைத்துறை சார்ந்த அறிவு மற்றும் திறனை மட்டும் வளர்க்கவில்லை, பல பரிமாண கட்டமைப்பை வழங்குகின்றன; கற்பவர்களிடையே படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகின்றன.
ஆன்லைன் டிப்ளமோ பயிற்சி படிப்பில் திரைப்பட உருவாக்கம், இயக்கம், திரைக்கதை எழுதுதல், நடிப்பு மற்றும் சினிமா தயாரிப்பு ஆகியவற்றின் அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படும்.
ஆன்லைன் திரைப்படத் தயாரிப்பு குறித்த பாடங்களை படிப்பவர்கள் எளிதாக கற்கும் வகையில், 7 இந்தியமொழிகளில் இந்த பாடங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

- அடிப்படைகள் திரைப்பட உருவாக்கம்
திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படை குறித்த ஆன்லைன் பாடத்தில், திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படை கொள்கை, திரைப்பட உருவாக்க செயல்முறையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய பரந்த கண்ணோட்டம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது. இதிலுள்ள பல்வேறு தொகுதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பாட திட்டங்கள், படிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

- இயக்கம்:
கதையின் நோக்கம் அல்லது அதன் கரு சிதையாமல் அதனை சொல்வதென்பது, மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.
பல படங்களின் தொடர்ச்சியான இயக்கம், ஒளி அமைப்புகள், உணர்வுகளை தாங்கி நிற்கும் கதாபாத்திரங்களின் நாடகங்களால் தான் ஒரு கதை அதன் நிஜத் தன்மையை அடைகிறது.
பெரிய குழுக்களை வழிநடத்துவது, ஆக்கப்பூர்வமான தேர்வுகளை மேற்கொள்வது மற்றும் மிகச்சிறந்த வேலைகளை விடாமுயற்சியுடன் ஒப்படைப்பது ஆகியவை இயக்கத்தின் தலைசிறந்த அம்சங்கள். திரைப்படத் தயாரிப்பு, காட்சிப்படுத்தல் மற்றும் துல்லியமான விவரங்களோடு அதனை செயல்படுத்தல் ஆகியவற்றின் ஆழமான புரிதலோடு இயங்கும் திரைப்பட இயக்கம் என்பது ஒரு நுணுக்கமான ஒழுக்கமாகும்.
உங்களுடைய வாழ்வின் அனுபவங்கள் மற்றும் சொல்லவிரும்பும் கதைகளை தனித்துவமான முறையில் சொல்ல வேண்டுமானால், இந்த ஆன்லைன் திரைப்பட இயக்கப்படிப்பு உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் உள்ள தனித்துவமிக்க திரைப்பட இயக்க சார்ந்த படிப்பாகும். இது 7 வெவ்வேறு மொழிகளில் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், சினிமா துறைக்குத் தயாராகவும் தனித்துவமிக்க பாடத்திட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸில் (RAM), உங்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் விளக்கமளிக்கும் செயல்முறைகளை மேம்படுத்துவதன் மூலம் திரைப்பட இயக்க கலை மற்றும் கதை உருவாக்கத்தை கற்றுக்கொள்ள முடியும்.
இத்தகைய பாடத் திட்டமானது, பொருத்தமான முறையில் ஒருவர் கதையைச் சொல்லத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவது மட்டுமல்லாமல், ஒரு பணியை நிறைவேற்றுவதற்கான பயணத்தைத் தொடங்கவும் ஒருவரைத் உற்சாகப்படுத்துகிறது.

- திரைக்கதை
உங்களிடம் ஓரு கதைக்கான கரு உள்ளதா மற்றும் அதை திறம்பட கட்டமைக்க விரும்புகிறீர்களா?
ஒரு நல்ல ஸ்கிரிப்ட் எழுதுவது என்பது அவ்வலவு எளிமையல்ல; இது ஒவ்வொரு காட்சியையும் உளி கொண்டு செதுக்குவதற்கு ஒப்பானதாகும். எனவே தான் ஒரு நல்ல திரைக்கதை என்பது மிகவும் விரும்பப்படும் ஒன்றாக திகழ்கிறது.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எவ்வாறு அணுகி மேம்படுத்துவது, பார்வையாளர்களுக்குப் புரியும் வகையிலான அழுத்தமான கதைக்களத்தை உருவாக்குது என்பதை அறிந்துவிட்டால் பாதி யுத்தத்தை வென்றுவிட்டதற்கு சமம்.
இதைத்தான் ராமோஜி அகாடமி வழங்கும் ஸ்கிரிப்ட் எழுதும் ஆன்லைன் பாடதிட்டத்தில் பயிற்றுவிக்கிறது. இந்த ஆன்லைன் பாடப்படிப்பினை படிப்பவர்கள், சரியான வழிகாட்டுதலுடன் தனக்கான தளத்தை அடைய முடியும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த திரைக்கதை எழுதும் பாடப்படிப்பினை இந்தியாவில் தேடிவருபவர் நீங்களென்றால், நீங்கள் சரியான இடத்தை அடைந்து இருக்கிறீர்கள்; இங்கு வழங்கப்படும் இலவச ஆன்லைன் ஸ்கிரிப்ட் ரைட்டிங் பாடப்படிப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

- நடிப்பு
உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க விரும்புவர் நீங்களென்றால், இது உங்களுக்கான இடம்.
ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்குத் திறமையும் உணர்வும் இருந்தால், உங்கள் திறமையை மேம்படுத்தி நடிப்பு உலகில் உங்கள் முதல் அடியை எடுத்து வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ.
நடிப்பு என்பது தூண்டுதலாலும், கற்பனை மற்றும் வாழ்ந்த அல்லது அனுபவம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை வெளிக்கொண்டுவருவது ஆகும். நடிகர்கள் தங்கள் உடல் மொழியையும் குரலையும் நடிப்பின் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். நினைவுத்திறனும், கற்பனைத்திறனும் கூட பயன்படுகிறது.
நடிப்பு என்பதனை சொல்லித்தரமுடியும், முழுமையாக கற்றுக்கொள்ளவும் முடியும். நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கான படிப்பு இது. ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸில்(RAM) நடிப்பிற்காகப் பயிற்றுவிக்கப்படும் இந்த இலவச ஆன்லைன் படிப்பு என்பது, மிகவும் சிக்கலான நடிப்பு முறைகளை தகர்த்து, நடிப்பில் இருக்கும் நுணுக்கமானப் புரிதலையும், ஒழுக்கத்தையும் புரியவைக்க முயற்சிக்கிறது.

- திரைப்படத் தயாரிப்பு:
திரைப்படத் தயாரிப்பு என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட வழியில் திட்டமிட்டு, பணிகளை சிறந்தமுறையில் செயல்படுத்துவது.
திரைப்படத்தயாரிப்பு என்பது பல பணிகளை உள்ளடக்கியுள்ளது . திட்டமிடல் மற்றும் படப்பிடிப்புகளை ஒருங்கிணைத்தல், பட்ஜெட் மற்றும் ஒருங்கிணைப்புக்கு பிந்தைய தயாரிப்புகளை மேற்பார்வையிடுதல் ஆகிய பல பணிகளைக் கொண்டுள்ளது.
இதற்கு படைப்பாற்றல் மட்டுமே போதுமானதல்ல, தொழில்நுட்பம் மற்றும் வணிகத்தின் அம்சங்களைப் புரிந்துகொள்ளும் திறனும் தேவை. ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸின்(RAM) திரைப்படத் தயாரிப்பு பாடப்படிப்பு, செயல்முறைகளால் சிறந்த பணிகளை செய்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. டிஜிட்டல் யுகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள திரைப்படத் தயாரிப்புத்துறையின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றிய நுணுக்கங்களை இந்தப்பாடப்பிரிவு வழங்குகிறது.
இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்புத்துறையில், சிக்கலான செயல்முறையின் ஒவ்வொரு அம்சத்தையும் புரிந்துகொள்வதற்கான சிறப்புத் தகவல் மற்றும் நிபுணத்துவ அறிவை மாணவர்கள் பெறுவார்கள்.
அத்தகைய மேம்படுத்தப்பட்ட திரைப்படத்தயாரிப்பு கோர்ஸை ஆன்லைனில் இலவசமாக ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸில் கற்றுக்கொள்ளுங்கள்.
