ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ், திரைத்துறையின் அடுத்த தலைமுறை பொழுதுபோக்கு கலைஞர்களை உருவாக்கும் இடம். மேலும் திரைப்பட உருவாக்கம், இயக்கம், திரைக்கதை எழுதுதல், நடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் இலவச ஆன்லைன் படிப்புகளை கற்றுக்கொள்ளும் ஒரு தளம்.
ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ் , திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான திரைத்துறை சார்ந்த அறிவு, திறன் மேம்பாடு குறித்த தகுந்த கற்பித்தல் மூலம் அவர்களைத் திரைத்துறைக்கானவர்களாய் தயார்படுத்தும்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான உலகத்தரம் வாய்ந்த ஆன்லைன் படிப்புகளை வழங்குவதே ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ்’ன் முக்கிய நோக்கம்.
இது ராமோஜி குழுமத்தின் ஒரு அங்கமாகும். ராமோஜி நிறுவனம், இந்தியாவின் ஹைதராபாத் நகரை தளமாகக் கொண்ட பன்முக கார்ப்பரேட் நிறுவனம். 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ராமோஜி குழுமம், பல்வேறு வணிக நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது; மேலும் திரைத்துறை பற்றிய பரந்த பார்வை மற்றும் கொள்கைகளால் ஆன தொழில் வரையறைகளைக்கொண்டு நிறுவனம் செயல்படுகிறது.
குறிப்பாக, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அவற்றுள் வெகுஜன ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, திரைப்பட உருவாக்கம், அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம், வானொலி, விருந்தோம்பல், உணவுப்பொருள் சார்ந்த மொத்த மற்றும் சில்லறை விற்பனை, நிதிச்சேவைகள், ஆரோக்கியம், உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் சேவையாற்றி வருகிறது.
ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ், சிறந்த கலாசாரத்திற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது மற்றும் இந்த துறையில் சாதிக்க வேண்டுமென துடிப்பவர்களுக்கு சரியான திரைத்துறை வாய்ப்புகளின் நுழைவுவாயிலுக்கு அழைத்துச் செல்கிறது. நாடு முழுவதும் திறமைகளை வளர்க்கும் அதே வேளையில் திரைப்படக்கல்வியை பயிற்றுவிப்பதில் சிறந்த நடைமுறையை மேற்கொண்டுள்ளது.
ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ் போட்டிகள் - திறமையானவர்களுக்கான ஒரு தளம்:
ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ் (RAM) திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக ராமோஜி குறும்படப் போட்டியை நடத்துகிறது. இதன்மூலம் வளர்ந்து வரும் புதிய திரைப்பட இயக்குநர்கள் தனக்கான இடத்தை திரைத்துறையில் அடைய ஒரு தளத்தை வழங்குகிறது.
இந்த குறும்படப்போட்டிகள் பங்கேற்பாளரின் குறும்பட ஈடுபாட்டை அதிகரிப்பது மட்டுமல்லாமல் படைப்பாற்றல் மற்றும் சிறப்பாகப் பணியாற்றும் திறனையும் வெளியில் கொண்டுவரும்.
ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸ்’ன் நோக்கம், திரைப்படங்களில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு கலைஞனையும் சென்றடைவதே. மேலும் திரைப்பட உருவாக்கம் சார்ந்த ஆன்லைன் படிப்புகளைப் பயிற்றுவிப்பதன் மூலம்
முன்னுதாரணமான அர்ப்பணிப்பு மற்றும் அதற்கு காரணமான பொறுப்புணர்வையும் ஒரு சேர வளர்க்க முடியும் என்று நம்புகிறது
" திரைப்படம் தயாரித்தல் என்பது எண்ணற்ற வாழ்வை வாழ ஒரு வாய்ப்பு"