ராமோஜி குழு - வித்தியாசமான அனுகுமுறையே எங்கள் விருப்பம்

ராமோஜி குழுமம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பல பரிமாணங்களைக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனமாகும். 60 ஆண்டுகளை கடந்த இந்த குழுவானது மிகவும் பல்வகைப்பட்ட வணிக நிறுவனங்களில் ஒன்றாக பரிணமித்துள்ளது. தொலை நோக்கு பார்வை மற்றும் விழுமியங்களால் ஆதரிக்கப்பட்டு, பொழுதுபோக்கு, திரைப்படத் தயாரிப்பு, ஊடகம் - அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியா மற்றும் வானொலி, விருந்தோம்பல், சில்லறை விற்பனை, உணவு விற்பனை, நிதிச்சேவைகள், உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ மற்றும் அதன் சுற்றுலா ஆகியவற்றில் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. விரிவான திரைப்பட உருவாக்க உள்கட்டமைப்பு, திரைப்பட உருவாக்க கல்வி ஆகியப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது

RAM-Ramoji-Group-world-of-cinema-ushakiron-Movies-India
உஷாகிரண் மூவிஸ் 40 ஆண்டுகள் அனுபவமிக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். அதன் வரவினால் 86க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கிடைத்துள்ளன. இது மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு சார்ந்த படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம்.
ராமோஜி ஃபிலிம் சிட்டி கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமாகும். மேலும் இது மிகவும் முழுமையான திரைப்பட உருவாக்கத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உள்ளடக்கியது. படப்பிடிப்புக்கு தயாராக உள்ள செட், தயாரிப்பு வசதிகள் மற்றும் பிற ஆதரவு சேவைகளை வழங்கி வருகிறது.இதுவரை 2600-க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. ராமோஜி ஃபிலிம் சிட்டி ஒரு பிரபலமான விடுமுறை மற்றும் ஓய்வு நாட்களுக்கான இடமாகும். தீம் பார்க்குகள் மற்றும் உலவும் இடங்கள், ஸ்டுடியோ டூர், சுற்றுச்சூழல் சுற்றுப்பயணம், பறவை பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, தினசரி நிகழ்ச்சிகள், அதிரடி சண்டைக்காட்சிகள், மகிழ்ச்சி தரும் விளையாட்டுகள், சாகசங்கள், வேடிக்கையான சவாரிகள், உணவு அரங்குகள், சிறந்த தங்கும் ஹோட்டல்கள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன.
Ramoji-Group-quality-driven-entertainment
ETV நெட்வொர்க் பொதுவாக பொழுதுபோக்கு, நகைச்சுவை, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, உணவு & சமையல் மற்றும் சினிமா ஆகியவற்றிற்கான தனியான சேனல்களை வழங்கி வருகிறது. ரேடியோ சேனல் மூலம் உள்ளூர் மற்றும் பிராந்தியத்தில் நடப்பவற்றை துடிப்பான மற்றும் கலகலப்பான ஜனரஞ்சகமான கருத்துகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. ராமோஜி குழு பல்வேறு இந்திய மொழிகளில் குழந்தைகளுக்காக ஈடிவி பால் பாரத் தொலைக்காட்சி சேனல்களின் பிரத்யேக நெட்வொர்க்கை இயக்கி வருகிறது. இந்த சேனல்கள் வேடிக்கை, பொழுதுபோக்கு, அறிவு மற்றும் தகவல் ஆகியவற்றின் சரியான கலவையாகும். இது குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு சேனலாகும். OTT தெலுங்கு முயற்சி, 'ஈடிவி வின்' என்பது, திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் பிற தகவல் உள்ளடக்கங்களை உள்ளடக்கிய இன்ஃபோடெயின்மென்ட்டின் மிகப்பெரிய பொக்கிஷமாகும். இதனை சந்தா செலுத்தி வாடிக்கையாளர்கள் ரசித்துவருகின்றனர்.
RAM-Ramoji-Group-Print-broadcast-digital-media-India
தெலுங்கு நாளிதழான ஈநாடு நாளிதழ், தெலுங்கு மொழிபேசும் மாநிலங்களில் மிக அதிகளவில் விற்பனையாகும் நாளிதழ் என்னும் புகழ்பெற்று, மக்களைச் சென்றடைவது மற்றும் பிரபலம் கொண்டு இருத்தல் என்னும் தனது நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறது. அது பிராந்திய செயற்கைக்கோள் செய்தி சேனல்களான ஈடிவி ஆந்திரப்பிரதேசம், ஈடிவி தெலங்கானா வரை விரிவடைந்திருக்கிறது. இந்த செய்தி சேனல்கள் சர்வதேசம் முதல் உள்ளூர் வரையிலான நடப்பு நிகழ்வுகளைப் படம்பிடித்து, எப்போதும் புதுமையான ஊடகப் பயணங்களை மேற்கொண்டுவருகிறது. மேலும் பார்வையாளர்களுக்கான இதழியலை புதிய தரநிலைகளுடன் அமைத்து கையாள்கிறது.
ஈடிவி பாரத் என்பது ஆங்கிலம் உட்பட 12 முக்கிய இந்திய மொழிகளில் வழங்கப்படும் சமீபத்திய டிஜிட்டல் ஊடக முயற்சி. இந்த ஈடிவி பாரத் இணையதளம் 28 இந்திய மாநிலங்களின் செய்திகளை பிரத்யேக செயலி மற்றும் இணையதளங்களில் சுவைபட பதிவு செய்து வருகிறது.
RAM-Ramoji-Group-Hyderabad-telangana-India
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டி ஹைதராபாத் ஆகியவற்றில் டால்பின் ஹோட்டல்கள் உள்ளன. இவை பல்வேறு பட்ஜெட் மற்றும் ஆடம்பரமான வகையில் மக்களுக்கு சிறந்த தரம் மற்றும் விருந்தோம்பல் மூலம் இயங்கி வருகின்றன.
பிரியா ஃபுட்ஸ் என்பது பல மக்களின் இல்லங்களில் விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது. இது இந்திய சமையலறையின் உண்மையான மற்றும் பாரம்பரிய சுவைகளை வழங்கி வருகிறது.
தவிர்க்க முடியாத உணவு மெனுக்களில் பிரியா ஃபுட்ஸின் ஊறுகாய், பொடிகள், மசாலாக்கள், தின்பண்டங்கள், உடனடி கலவைகள் மற்றும் தினைப்பொருட்கள் என்னும் பல்வேறு வடிவங்களில் உள்ளது. கலாஞ்சலி என்ற சில்லறை வணிகமானது, பல்வேறு இந்திய நகரங்களில் அமைந்துள்ள ஷோரூம்களில் வழங்கப்படுகிறது. நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளின் பொக்கிஷங்களை மக்களுக்கு வழங்குகிறது.
சுகிபவா மையம் என்பது முழுமையான ஆரோக்கிய மையமாகத் திகழ்கிறது. பல்வேறு மாற்று மற்றும் பாரம்பரிய சிகிச்சைகள் உட்பட முழுமையான ஆரோக்கிய திட்டங்களை வழங்கி வருகிறது.